ஹரியானா விவசாயிகளுக்கு தன் வீட்டில் விருந்தளித்த ராகுல்காந்தி. சோனியா,ப்ரியங்கா காந்தி உடன் பாட்டுப்பாடி ஆடி கொண்டாட்டம்

சண்டிகர் : ஹரியானா மாநிலத்தில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி ட்ராக்டர் உழுத ராகுல் காந்தி, அந்த உழவர்களை தனது வீட்டிற்கு அழைத்தும் உணவு வைத்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டது. சமீபத்தில் ஹரியானா மாநிலம் கிராமம் ஒன்றில் விவசாயிகளுடன் இணைந்து சேரும் சகதியும் நிறைந்த வயலில் இறங்கி டிராக்டரை ஓட்டி உழுதார் ராகுல் காந்தி. அத்துடன் நடவு பணியில் ஈடுபட்டு இருந்த பெண்களுடன் இணைந்து நெல் நாற்றுகளை ராகுல் காந்தி நட்டார். அவர்களுடன் வயல் வெளியில் அமர்ந்து சாப்பிட்ட ராகுல், மக்களின் கஷ்டங்களை கேட்டறிந்தார்.

அப்போது ஒரு பெண், தங்களை டெல்லிக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அவரிடம் ராகுல் எனக்கு வீடு இல்லை. எனது வீட்டை அரசு எடுத்துக் கொண்டது என்றார். உடனடியாக அந்த பெண், அதனால் என்ன அந்த அரசாங்கத்தை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அங்கிருந்தவாரே சகோதரி பிரியங்காவிடம் அந்த பெண்களை டெல்லிக்கு அழைத்து வருவதாக போனில் அழைத்து பேசினார் ராகுல். தன்னுடன் வயல் வெளிகளில் ஈடுபட்ட அந்த விவசாய பெண்களை டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார் ராகுல்.

அங்கு தனது தாயார் சோனியா மற்றும் சகோதரி பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து அவர்களுடன் உணவு உண்டு மகிழ்ந்தார். அந்த விவசாய பெண்களுடன் கைகளை கோர்த்தவாறு சோனியாவும் பிரியங்காவும் நடனமாடி மகிழ்ந்தனர். ராகுல் காந்தியின் யூடியூப் பக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஏற்கனவே சரக்கு வாகன ஓட்டுனர்கள், றில்லை சக்கர வாகன ஓட்டுனர்கள் பழுது பார்ப்போரை சந்தித்து ராகுல் காந்தி உரையாடிய காட்சிகள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது விவசாயிகள் சந்திப்பு வீடியோவையும் வைரல் ஆகி உள்ளது.

Related posts

திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!!

கல்வராயன் மலைப் பகுதியில் சாலையை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு..!!