ஹரியானாவில் கள்ள சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 7 பேரை கைது செய்தது போலீஸ்

ஹரியானா: ஹரியானாவில் கள்ள சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் யமுனாநகர் மற்றும் அம்பாலா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் கள்ள சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மது வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, இதுவரை ஏழு பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், உயிருக்கு பயந்து மது வியாபாரிகளுக்கு எதிராக வெளிப்படையாக பேச கிராம மக்கள் பயப்படுகிறர்கள். கிராமவாசி ஒருவர் கூறுகையில், “நாங்கள் அவர்களுக்கு எதிராக பேசினால் எங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அம்பாலா காவல்துறையினர் மூடிய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 200 கள்ள மதுபான பெட்டிகளை கைப்பற்றினர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு