ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி

டெல்லி: ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டியளித்துள்ளார். ஹரியானா தேர்தல் முடிவுக்கான தீர்ப்பு மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. ஹரியானாவில் 3 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன. தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் அளிப்போம். காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டு உள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு