இலங்கையின் 16ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

கொழும்பு: இலங்கையின் 16ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார். இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன ராஜினமா செய்த நிலையில் இடைக்கால பிரதமர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர்அனுர குமார திசநாயகே வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்ததாக தினேஷ் குணவர்தனே தெரிவித்தார்.

இதனை அடுத்து இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.

Related posts

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு