அகிலேஷ் யாதவ் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துகள் அகிலேஷ் யாதவ். உங்களின் சிறப்பான தலைமைத்துவமும், தொடர் தீவிர பரப்புரையும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியைப் பெரும் வெற்றி பெற வைத்தது. நம் இந்தியா கூட்டணிக்கு உங்கள் பங்களிப்புகள் மிக முக்கியமானதாக அமைந்துள்ளன. வருங்காலத்தில் நீங்கள் இன்னும் பெரிய பொறுப்புகளை வகிப்பதை காண ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை