இலவச வீட்டு மனைக்குரிய இடத்தை ஒப்படைக்க வேண்டும்: கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் மனு

திருவள்ளூர்: 14 பழங்குடியின பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையினை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கரிடம் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் 14 பழங்குடியின குடும்பத்தினர் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், மாதர்பாக்கம் – பதிரிவேடு கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் 14 குடும்பங்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு தேர்வாய் கண்டிகை பகுதியில் புல எண் 289/54 முதல் 289/67 வரை உள்ள இடத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் 2.5 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஒரு வருடம் ஆகியும் இதுவரை 14 பயனாளிகளுக்கு நிலத்தை முறையாக அளவீடு செய்து ஒப்படைக்கப்படவில்லை. இதனால் அரசு இலவச வீடு ஒதுக்கீடு செய்தும், வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். எனவே தாங்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தினை அளவீடு செய்து இலவச வீட்டு மனையினை ஒப்படைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related posts

* பேரவையில் இன்று…

இளம்பெண் பலாத்காரம்: ராணுவ வீரர் அதிரடி கைது: காவல் நிலையத்தில் இருதரப்பு மோதல்

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்து ‘தா’ பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு