ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்: காசா போர் இனி என்னவாகும்?

பெய்ரூட்: இஸ்ரேல், காசா இடையே நடந்த போரில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த மாதம் ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அறிவித்து உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் ஹமாஸ் அமைப்பின் புதிய உயர்மட்டத்தலைவராக யாஹ்யா சின்வார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹமாசின் ஆயுதப்படையுடன் மிகவும் நெருக்கமான தலைவர். இப்படிப்பட்ட சூழலில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பதில் சின்வார் என்ன முடிவு எடுப்பார், இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு என்ன பதிலடி கொடுக்கப்படும் என்பது தொடர்பான பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு