ஆவினில் ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை என வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி வதந்தி: உண்மை சரிபார்ப்பகம்

சென்னை: ஆவினில் ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை என வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி வதந்தி என தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. ஹலால் என்பது ஆடு, கோழி மற்றும் மாடு போன்ற இறைச்சிகளை அறுக்கும் முறையாகும். உணவுக்காக ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சிகளை இஸ்லாமியர்கள் உண்ணுகின்றனர்.

உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகளை முழுமையாக அறுக்காமல், அதன் மூளைக்குச் செல்லும் நரம்பு வரை அறுக்கப்படுவதற்கு பெயர்தான் ஹலால் என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஆவின் வெண்ணையில் ஹலால் முத்திரை இருந்தது குறித்து கேள்விகள் எழுப்பட்டது. சிலர் இந்துக்கள் ஆவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆவினில் ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை என வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி வதந்தி என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பகம் கூறியதாவது; ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் 15க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரபு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் மட்டுமே ஹலால் முத்திரை இடம்பெறுகிறது. தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Related posts

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 50 பேர் உயிரிழப்பு

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்