2024ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி: 2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2024-ற்காக விண்ணப்பிக்கும் முறை 04.12.2023 அன்று முதல் ஆன்லைனில் தொடங்கி, இன்றுடன்(20.12.2023) முடிவடைகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கை காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், ஹஜ் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 15, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2024 ஜனவரி 15 அல்லது அதற்கு முன் வழங்கப்பட்ட இயந்திரம் படிக்கக்கூடிய இந்திய சர்வதேச பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் 31″ ஜனவரி, 2025 வரை செல்லுபடியாகும் ஹஜ்-2024 க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்தியா https://hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்

அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் ஹஜ் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன், ஹஜ் வழிகாட்டுதல்கள் – 2024ஐ கவனமாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆகஸ்ட் 31ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்: கலெக்டர் துவங்கி வைத்தார்

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி: செங்கல்பட்டு கலெக்டர் பங்கேற்பு

நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு