ஆரோக்கியமான கூந்தலுக்கு அருமையான ஜூஸ்கள்!

நம் சருமம் , மற்றும் கூந்தல் என அத்தனைக்கும் பல தீர்வுகள் இயற்கையிலேயே உள்ளன. கூந்தல் வளர்ச்சிக்கும், உதிர்வுக்கும் பழச் சாறுகளே பல பயன்கள் தரும். இந்த ஜூஸ்கள் முடி உதிர்வுக்கு நல்ல தீர்வாக அமையும். முடி கொட்டாமல் இருக்க முடிக்கு மேல் கொடுக்கும் வைத்தியத்தை போலவே உடலுக்குள்ளும் சில விஷயங்களை செய்ய வேண்டும். அதாவது, ஆரோக்கியமாக சிலவற்றை சாப்பிட வேண்டும். குறிப்பாக முடிக்கு ஊட்டம் தரும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள் மிகமிக அவசியம்.இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள மறக்கக் கூடாது. இதனால் சருமம் நலனும் சேர்ந்தே முன்னேற்றம் அடையும். இந்த வகை ஜூஸ்களை வாரம் 2 முறை அல்லது குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது குடிக்க முயற்சி செய்யுங்கள். முடி உதிர்தல் பிரச்னை படிப்படியாக நின்று விடும்.

இரும்புச் சத்து நிறைந்த ஜூஸ்கள்

இந்தியாவில் பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இரும்புச் சத்து குறைபாடு அல்லது இரத்தசோகை. இதை சரிசெய்ய இரும்புச்சத்து நிறைந்த ஜூஸ்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் ஜூஸ் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது. முடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. மதிய நேரத்தில் இந்த வகை ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காயுடன் புதினா, எலுமிச்சைச் சாறை நன்கு அரைத்து, அதை குடிக்கவும்.

நெல்லிக்காய் ஜூஸ்

முடிக்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் ஏற்றது. வெறும் நெல்லிக்காயைக் கூட தினமும் எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வை திறம்பட கட்டுப்படுத்தும்.

பசலைக்கீரை ஜூஸ்

இரும்புச் சத்து அதிகம் உள்ள பசலைக் கீரையை உணவில் சேர்க்கலாம். இந்தக் கீரையில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் தாமிரம் போன்ற பிற ஊட்டச் சத்துக்களும் உள்ளன. இது இரும்புச்சத்து நிறைந்தது. அப்படியே அரைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்து வடிக்கட்டி குடிக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பழத்தை பசலைக்கீரையுடன் சேர்த்து அரைத்துக் குடிக்கலாம்.

அத்திப்பழ ஜூஸ்!

அத்திப்பழம் பொதுவாக இரத்த விருத்தி, உடல் குளிர்ச்சி, உயிரணுப் பெருக்கத்திற்கு மட்டுமல்ல , சருமம், முடி உள்ளிட்டவைகளுக்கும் பயன்கள் அள்ளிக் கொடுக்கும்.
– பொ. பாலாஜிகணேஷ்

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு