ஹத்ராஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ராகுல் காந்தி

லக்னோ: ஹத்ராஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பமும் உங்களுடன் நிற்கிறது என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; ஹத்ராஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எனவே அவர்களின் இந்த கடினமான காலத்தில் உதவ வேண்டும். இதை நான் அரசியல் பார்வையில் இருந்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிர்வாகத்தில் குறைபாடு உள்ளது, தவறுகள் நடந்துள்ளன. எனவே அவை விசாரிக்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசினேன், நிர்வாக குறைபாடு என்றார்கள், தேவையான அளவு போலீஸ் ஏற்பாடு இல்லை என்றார்கள் என்று கூறினார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு