ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி: ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது

நொய்டா: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் உள்ளூர் மக்களை சந்தித்து விசாரணையை தொடங்கியுள்ளது. உபி மாநிலம் ஹத்ராசில் கடந்த 2ம் தேதி நடந்த போலே பாபா என்ற சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாயினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான தேவ் பிரகாஷ் மதுக்கர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி விசாரணை குழுவை அரசு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஹத்ராஸில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் நேற்று காலை ஹத்ராஸில் உள்ள பொதுமக்கள், அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். ஹத்ராஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததில் ஒரு அரசியல் கட்சியின் தொடர்பு குறித்தும் விசராணை நடந்து வருகிறது. 70க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை: அமுல் நிறுவனம் விளக்கம்!