ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்..!!

ஹத்ராஸ்: உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க உள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்திக்க இன்று அதிகாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். சுமார் 7.30மணி அளவில் ஹத்ராஸை வந்தடைந்த ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்