குட்கா விற்ற கடைகளுக்கு சீல்

செங்கல்பட்டு: கடந்த சில நாட்களாக மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மறைமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த ஒருவாரத்தில் குட்கா, பான்மசாலா என்கிற போதை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் விதிக்கப்பட்டது.

மேலும், இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று மறைமலைநகரில் அரசு பள்ளி அருகில் உள்ள கடைகளில் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனையில் ஈடுபட்டு அபாரதம் விதித்தனர். குட்கா போன்ற போதை பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபாரதம் விதித்து கடைகளுக்கு சீல் வைப்பது மறைமலைநகர் பொதுமக்களிடம், மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு