குரு பெயர்ச்சியை முன்னிட்டு பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

 

திருப்புத்தூர், ஏப்.22: குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் குரு தலமாக பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயில் அமைத்துள்ளது. இன்று இரவு 11.29 மணிக்கு குரு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் கடந்த 16ம் தேதி சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மூலவர் வெள்ளி அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். தலவிருட்சத்தின் கீழ் உற்சவர் எழுந்தருளி முனிவர்கள் தனந்தகுமாரர், தனநந்தர், தனாதனர், சனகர் ஆகியோருக்கு மந்திரம் உபதேசிக்கும் நிலையில் கார்த்திகை பெண்கள் உள்ளிட்ட அலங்காரத்தில் காட்சி தருகிறார். இரவு 11:29 மணிக்கு குரு பெயர்ச்சியின் போது ராஜகோபுரம், மூலவர், உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வீரப்பச் செட்டியார் செய்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு