குர்பத்வந்த் பன்னுன் விவகாரம் சிபிஐ இயக்குனருடன், எப்பிஐ இயக்குனர் சந்திப்பு

புதுடெல்லி: அமெரிக்க புலனாய்வு துறை இயக்குனர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார். காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி என்னும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியாவுக்கு எதிராக செசயல்பட்டு வருகிறார். ஒன்றிய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள பன்னுனை நியூயார்க்கில் கொலை செய்ய முயற்சித்ததாக நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. குர்பந்த்வந்த் சிங் விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசும் அறிவித்தது. இந்நிலையில், ஒன்றிய அரசின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமைப்புகளின் அதிகாரிகளை சந்திப்பதற்காக அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குனர் கிறிஸ்டோபர் ரே நேற்றுமுன்தினம் டெல்லி வந்தார். இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அவர் நேற்று சிபிஐயின் இயக்குனர் பிரவீன் சூட்டை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, சைபர் குற்ற வழக்குகள், போதை பொருள் கடத்தல், நிலுவையில் உள்ள நீதித்துறை கோரிக்கைகள், தேடப்படும் குற்றவாளிகளை நாடு கடத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!