மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சண்டை

இம்பால்: மணிப்பூரில் நேற்று குக்கி, மெய்டீஸ் இனத்தினரிடையே நேற்று மீண்டும் துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் மூண்ட இனக்கலவரம் இன்னமும் ஓயவில்லை. அங்கு, பழங்குடியின குக்கி சமூகத்தினருக்கும், மெய்டீஸ் இனத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகள் மீது மலை உச்சியில் இருந்து குக்கி இனத்தினர் நேற்றுமுன்தினம் இரவு துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இருதரப்பும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அங்கு அமைதியை நிலைநாட்டினர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தரப்பிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு!

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது