மன்னர் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்றால் 3 வது நாளாக கடலுக்கு செல்லவில்லை தூத்துக்குடி மீனவர்கள்..!!

தூத்துக்குடி: மன்னர் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்றால் 3வது நாளாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக மீன்பிடி துறைமுகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. 250 விசைப்படகுகள், 600 நாட்டுப்படகுகள், 500 பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லாததால் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது