குஜராத் மாநில கடற்பகுதியில் 3,300 கிலோ போதை பொருள் பறிமுதல்: 5 பாகிஸ்தானியர்கள் கைது

போர்பந்தர்: குஜராத் மாநில கடற்பகுதியில் இருந்து 3,300 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேலும் 5 பாகிஸ்தானியர்களை கைது செய்தனர். குஜராத் மாநிலம் போர்பந்தர் அடுத்த டோ என்ற கடற்பகுதியில் பயணித்த பாய்மரக் கப்பலை, இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை இணைந்து மடக்கியது. அப்போது அந்த கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவற்றில் 3089 கிலோகிராம் சரஸ், 158 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 25 கிலோகிராம் மார்பின் ஆகியனவாகும்.

அந்த கப்பலில் இருந்த 5 பாகிஸ்தான் பிரஜைகளை போதைப் பொருள் கட்டுப்பாட்டு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதுதொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட பதிவில், ‘போர்பந்தர் அடுத்த டோவில் பிடிபட்ட சிறிய கப்பலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து போதைப் பொருள் கட்டுப்பாட்டு முகமை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த கப்பலில் 3,300 கிலோ போதைப் பொருள் இருந்தது. அந்த கப்பலில் இருந்த 5 பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் அதிகாரிகள் கூறுகையில், ‘போர்பந்தருக்கு அருகே கடலில் சந்தேகத்திற்கிடமான பாய்மரக் கப்பல் செல்வதை கண்காணிப்பு விமானம் கண்டறிந்தது. அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலாக இருக்கும் என்று சந்தேகித்தோம். உடனடியாக கூட்டு நடவடிக்கைக் குழு களத்தில் இறங்கி, அந்தக் கப்பலை இடைமறித்தது. தற்போது பெரிய அளவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது