குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் டீஸ்டா செடால்வட் ஜாமீன் மனு தள்ளுபடி

அகமதாபாத்,: குஜராத் கலவரம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வடின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவர் உடனடியாக சரணடைய உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என அவரை வழக்கிலிருந்து விடுவித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பொய் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை உருவாக்கியதாக குஜராத் போலீசார் அவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர்.

இதனை எதிர்த்து செடால்வட் உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செடால்வட் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்சார் தேசாய், மனுவை தள்ளுபடி செய்து, உடனடியாக டீஸ்டா செடால்வட் சரணடைய நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதனால் டீஸ்டா செடால்வட் மீண்டும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Related posts

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்

கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ்