குஜராத் காந்திநகரில் மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

காந்திநகர்: குஜராத் காந்திநகரில் மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் சேமிகண்டக்டர் சூழல் அமைப்பை ஊக்கப்படுத்துதல் எனும் தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாக கொண்டு மாநாடு நடைபெறுகிறது. செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி உள்ளிட்டவற்றை விரிவுப்படுத்தும் முயற்சியாக மாநாடு நடைபெறுகிறது.

செமிகான் இந்தியா 2023 மாநாட்டில் மைக்ரான், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செமிகான் மாநாடு ஜூலை 30ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜெய்சங்கர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்