குஜராத்தில் காங்கிரசின் 14 நாள் நியாய யாத்திரை தொடங்கியது

மோர்பி: பாஜ ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய மோர்பி பாலம் இடிந்து விழுந்தது, வதோதரா படகு கவிழ்ந்த சம்பவம் உட்பட சமீபத்தில் நடந்த ராஜ்காட் கேம் ஜோன் தீ விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்ககோரி காங்கிரஸ் கட்சி சார்பில் 14 நாட்கள் நியாய யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அமித் சாவ்தா, சேவா தளத்தின் தலைவர் லால்ஜி தேசாய், எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் நியாய யாத்திரை பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். இந்த யாத்திரை 350கிலோமீட்டர் நடைபெறும். வருகிற 23ம் தேதி காந்தி நகரில் நிறைவடைகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு