எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த குஜராத் காங்.பெண் எம்பி

அகமதாபாத்: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பெண் எம்பி ஒருவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். குஜராத், பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் எம்பி கெனிபென் தாக்குர். இவர் பாஜ வேட்பாளர் ரேகாபென் சவுத்ரியை 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜ வென்றது. பனஸ்கந்தா தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

தற்போது எம்எல்ஏவாக இருக்கும் கெனிபென் தாக்குர் நேற்று பேரவை சபாநாயகர் சங்கர் சவுத்ரியை சந்தித்து எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதம் கொடுத்தார். கெனிபென் தாக்குர் வாவ் தொகுதியில் இருந்து 2 முறை எம்எல்ஏவாக தேர்வானார். 2017ம் ஆண்டு வாவ் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட சங்கர் சவுத்ரியை அவர் தோற்கடித்தார். அவரது ராஜினாமாவால் பேரவையில் காங்கிரசின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. பாஜவின் பலம் 161 ஆக உள்ளது. ஆம் ஆத்மிக்கு 4 பேர், சமாஜ்வாடி 1, சுயேச்சைகள் 2 பேர் உள்ளனர்.

Related posts

சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு