குஜராத்தில் புல்டோசர் நடவடிக்கை கோர்ட் உத்தரவை மீறினால் மீண்டும் கட்டி கொடுக்க உத்தரவிடுவோம்: அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: குஜராத்தை சேர்ந்த சும்மஸ்த் பட்னி முஸ்லிம் ஜமாத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் குஜராத்தில் கட்டிடங்கள் இடிப்பது தொடர்ந்து நடக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள் கூறுகையில்,நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் யாராவது மீறுவது தெரிந்தால் அவர்களை சிறைக்கு அனுப்புவதோடு இடிக்கப்பட்ட கட்டிடத்தை மீண்டும் கட்டி கொடுக்க உத்தரவிடப்படும் என்று எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை