கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை: வருகிற 15ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை வருகிற 15ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பிரத்யேகமாக மகளிருக்காகவே இயங்கி வருகிறது. இங்கு, பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற 15ம் தேதி வரை வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. கட்டிடக்கலை வரைவாளர், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் & கணினி பராமரிப்பு, இன்ஸ்டியூமென்டேஷன் மெக்கானிக்கல், கணினி உதவி எம்பிராய்டரி மற்றும் வடிவமைப்பு, பேஷன் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், தையல் தொழில்நுட்பம், ஸ்டெனோகிராபி (தமிழ்&ஆங்கிலம்), மேற்பரப்பு அலங்கார நுட்பங்கள் (எம்பிராய்டரி) இந்த தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற கட்டணமில்லை.

மேலும், இலவச மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், இலவச சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, இலவச வரைபடக் கருவிகள் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண் 044-22510001 மற்றும் 9499055651-ஐ அணுகலாம். கல்வித்தகுதி 8, 10ம் வகுப்பு தேர்ச்சி. தேவைப்படும் ஆவணங்கள்- மாற்றுச்சான்றிதழ் (அசல்), மதிப்பெண் சான்றிதழ் (அசல்) புகைப்படம்-4 மற்றும் ஆதார் அட்டை நகல், கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள 044-22510001, 9499055651 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை