40,000 காவலர்களை கூடுதலாக நியமிக்கணும்: ராமதாஸ் வலியுறுத்தல்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் இரண்டாம் நிலை காவலர்கள் தொடங்கி காவல்துறை தலைமை இயக்குநர் வரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் காவலர்கள் மட்டும் தான் உள்ளனர். ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 150 காவலர்கள் இருப்பது போதாது.

இதை ஒரு லட்சம் மக்களுக்கு 200 காவலர்கள் என்ற விகிதத்தில் உயர்த்த வேண்டும். 40 ஆயிரம் காவலர்களை புதிதாக நியமிக்க வேண்டும். டி.என்.பி.எஸ்சிக்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும். 25 மாதங்களாக தலைவர் இல்லாமல் இயங்கும் டி.என்.பி எஸ்.சியில் 16 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், 9 உறுப்பினர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். அதிலும் மூத்த உறுப்பினர் ஜோதி சிவஞானம் செப்டம்பர் 23ல் ஓய்வு பெறுவதால் ஆணையம் முடங்கிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்