ஜிடி டெக்சா எலக்ட்ரிக் பைக்

ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம், ஜிடி டெக்சா என்ற எலக்ட்ரிக் டூவீலரை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 3.5 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். ஆட்டோ கட் ஆஃப் கொண்ட மைக்ரோ சார்ஜருடன் வருகிறது. முழுமையாக சார்ஜ் ஆக 4 முதல் 5 மணி நேரம் ஆகும். மூன்று வித ரைடிங் மோட்கள் உள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 50 கிலோ மீட்டர் வேகத்தை 4.2 நொடிகளில் எட்டும். ரிமோட் கீ ஸ்டார்ட் வசதி, 17.78 சென்டிமீட்டர் எல்இடி டிஸ்பிளே, டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், எல்இடி லைட்டுகள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.1.2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே நிறுவனம் ஜிடி வேகாஸ், ஜிடி ரைட் பிளஸ், ஜிடி ஒன் பிளஸ் புரோ, ஜிடி டிரைவ் புரோ என்ற பெயரில் டூவீலர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் ஷோரூம் விலை சுமார் ரூ.55,555 முதல் ரூ.84,555 வரை உள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்