ஜிஎஸ்டி திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்: அதிகாரி தகவல்

புதுடெல்லி: ஜிஎஸ்டி திருத்த சட்டம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், குதிரை பந்தயம், கேசினோக்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில்,ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் மீதான வரி விதிப்பு,குதிரை பந்தயம் மற்றும் கேசினோ மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பான திருத்த சட்டம் வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்து ஒன்றிய வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா கூறுகையில்,‘‘ வரும் 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. இது தொடர்பான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்ற அரசு முயற்சி எடுத்துள்ளது. இதே போன்ற தீர்மானம் சட்ட பேரவைகளிலும் நிறைவேற்றினால் சட்டம் அமுலுக்கு வரும்’’ என்றார்.

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்