ரூ.10.14 கோடி ஜிஎஸ்டி மோசடி சட்டீஸ்கர் தொழிலதிபர் கைது

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ரூ.10.14 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தொழிலதிபர் சஞ்சய் ஷெண்டேவை ஜிஎஸ்டிதுறை அதிகாரிகள் கைது செய்தனர். சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த சஞ்சய் ஷெண்டே பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார். இவர் டெல்லியை தலைமையிடமாக கொண்ட 22 போலி நிறுவனங்களின் பெயரில் போலி விலைப்பட்டியல்களை தயாரித்து, ரூ.10.14 கோடி பெற்று ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ஷெண்டேவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது