குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு கலெக்டர் வழங்கினார்

செங்கல்பட்டு: மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ச.அருண்ராஜ், தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில், 408 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு காதொலி கருவிகள், 2 மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு ரூ.17,000 மதிப்பீட்டில் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,979 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள்,

முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் வருமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்காக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் கடனுதவி, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் வருமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்காக 5 பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அறிவுடைநம்பி, நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை அலுவலர் வேலாயுதம், உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* ஆதரவற்ற பெண்ணுக்கு தையல் இயந்திரம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். நேற்று நடந்த இக்கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 514 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்றைய கூட்டத்தில் உத்திரமேரூர் வட்டம், பாண்டவாக்கம் கிராமம், பள்ளத்தெருவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயார் மலர் வழங்கிய மனு மீது, உடனடியாக நடவடிக்கை எடுத்து அவருக்கு ரூ.6,840 மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு