இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தருவோம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

புதுக்கோட்டை: தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: இலங்கை அரசாங்கம், தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கையை கூர்ந்து பார்த்து, கடந்த மாதம் இலங்கை தூதகரத்தில் இருந்து அந்நாட்டு ஆளுநரை அனுப்பி, முதல் முதலாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து அந்நாட்டு அரசு, குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது.

அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள், இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர். எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்று தரும். இலங்கை தமிழர் மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கு அரசு அனுமதி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை