அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வாதிகார முடிவு: வைகோ

சென்னை: அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வாதிகார முடிவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துளளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என வைகோ தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு