அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு 6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2021 பிப்ரவரி மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதை தொடர்ந்து ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக, 2009 அக்டோபரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்தக் கோரி, மருத்துவர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை பரிசீலிக்கக் கோரி அரசு மருத்துவர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர், குழு பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிய போது 2021ல் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதனை செயல்படுத்த முடியவில்லை என்றார். இதனையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கை மனுவை 6 வாரத்தில் பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!