அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக செலுத்தி 4 மணி நேரம் சென்னைக்குள் பயணம் செய்யும் திட்டம்: அமைச்சர் சிவசங்கர் அறிமுகம்

சென்னை: ரூ.40 செலுத்தி 4 மணி நேரம் சென்னைக்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முதல்வர் உத்தரவுக்கு இணங்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தலைமை செயலகத்தில், மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக, நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40 கூடுதலாக கட்டணம் செலுத்தும்பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள், 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு