உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை: கலெக்டர், எம்எல்ஏ அஞ்சலி

திருவள்ளூர்: திருத்தணியில் உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் கலெக்டர், எம்எல்ஏ அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம்(60). இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இவர் மூளைச் சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் உடல் உறுப்பு தானம் செய்த நாகரத்தினம் உடலுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் தீபா, வட்டாட்சியர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கவர்னருடன் சந்திப்பு

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது

6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம்: 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு