அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: 2007ம் ஆண்டு கலைஞர் 3.5 விழுக்காடு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீட்டுக்குச் சட்டம் இயற்றி அறிவித்தார். ஆனால் இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்கின்ற ஐயம் இருந்து வருகிறது.

முஸ்லிம்களுக்கு புறக்கணிக்கப்பட்டிருந்த சமூக நீதியை வழங்கிட வேண்டுகிறோம். முஸ்லிம்களால் நிரப்பப் படவேண்டிய பணியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து அவற்றில் முஸ்லிம்களை நிரப்பிடவும் வழி வகுக்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கான 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பின்பற்றப்பட்டுள்ளது குறித்த தரவுகளை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு