அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க திட்டம்: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பற்றாக்குறையால் பேருந்து சேவையை சரிவர வழங்க முடியாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளில் டீசல் நிரப்புதல் உள்ளிட்ட பணிமனை சார்ந்த பணிகளை மேற்கொள்ள சுமார் 500 ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்களை வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் வகையில் மாற்றம் செய்ய மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டது.

மேலும் அவர்கள் செய்து வந்த பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு வெளியான டெண்டருக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், டெண்டர் முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் 400 ஓட்டுநர்களையும் நியமிக்க போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, திருச்சி, நாகை, கும்பகோணம், மதுரை, கோவை வழித்தடத்தில் ஒப்பந்த ஓட்டுநர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 பணிமனைகளில் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது. ஓசூர், தூத்துக்குடி வழித்தடங்களிலும் ஒப்பந்த ஓட்டுநர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஒப்பந்த ஓட்டுநர்கள் 12 மாதங்கள் மட்டும் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது