அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்

 

சென்னை: 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 24 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 77 ஆயிரத்து 439 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அவகாசம் வரும் 20ம் தேதி வரை இருப்பதால் விண்ணப்ப பதிவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Related posts

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி