தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் நீக்கம்: மாநில ஒருங்கிணைப்பு தலைவர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில ஒருங்கிணைப்பு தலைவர் என்.தண்டபானி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சிறப்பு மத்திய செயற்குழு கூட்டம் கடந்த பிப்ரவரி 3ம் தேதி தேனியில் நடந்தது.

இதில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்த பெருவாரியான இணைப்பு சங்கங்களின் மாநில தலைவர்களின் முடிவின்படி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையின் பேரில், அவரின் மீதான நம்பிகையை முற்றிலும் இழந்து விட்டதாலும், ஒட்டு மொத்த இயக்கத்தின் நலன்கருதியும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்க சட்ட திட்ட அமைப்பு விதிகளின்படி கடந்த மாதம் 3ம் தேதி முதல் மாநில தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில பொதுச்செயலாளர் செயல்முறை ஆணை மூலம் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.  இவர் உடனடியாக அனைத்து பொறுப்புகளையும் மாநில பொதுச்செயலாளர் என்.தண்டபானியிடம் ஒப்படைக்க வேண்டும். இனி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அனைத்து உறுப்பினர்களும் அமிர்தகுமாரிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!