ஆளுநர் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகாரில் 6 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

ஆளுநர் வரும் நிலையில் பல்கலைக்கழகத்தில் சோதனை:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு இன்று செல்ல உள்ள நிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்துறை பேராசிரியர் பெரியசாமி அலுவலகம், துணைவேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் உள்பட பல்கலை. வளாகத்தில் உள்ள 6 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்ட சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

முறைகேடு புகாரில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடைநீக்கம் செய்ய பல்கலை. ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற பல்கலை. ஊழியர்களின் கோரிக்கையை ஏற்காத ஆளுநர் இன்று துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலை. நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

ஆளுநர் வருகைக்கு எதிராக இன்று போராட்டம்:

முறைகேடு புகாரில் சிக்கியவர்களை ஆளுநர் சந்தித்து பேசுவதாக குற்றம் சாட்டி பல்கலை. ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். திமுக மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆளுநர் வருகைக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து பெரியார் பல்கலை. முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு