ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்படுகிறதா?

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல ரௌடி கருக்கா வினோத் என்பவரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். சிறையில் இருந்த கருக்கா வினோத்தை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்என் ரவி அனுமதி வழங்காமல் இருந்ததாகவும், நீட் தேர்வு வேண்டாம் என்றும் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்படுகிறதா என தகவல் வெளியாகியுள்ளது. வெடி மருந்து மூலம் அழித்தல், கொலை மிரட்டல், அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு துறைக்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை ஏற்கனவே தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தேச துரோகம், சதி திட்டம் தீட்டுதல், வெடி மருந்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே என்ஐஏக்கு மாற்ற முடியும்.

மாநில அரசின் அனுமதி இல்லாமல் இந்த வழக்கை என்ஐஏக்கு மாற்ற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்டமிடப்பட்ட குற்றங்களின் பட்டியலில் ஆளுநர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு வந்தால் யாருடைய அனுமதியும் என்ஐஏ பெற தேவையில்லை. வெடிபொருள் கொண்டு தாக்குதல், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுதல், கடத்தல் உள்ளிட்டவை திட்டமிட்ட குற்றங்களின் பட்டியல்களில் வரும். ஊபா சட்டத்தின் கீழ் நடைபெற்ற குற்றங்கள் வரும் பட்சத்தில் அவை நேரடியாக தேசிய புலனாய்வு துறைக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்