பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பேன்: முதல்வர் பகவந்த் சிங்குக்கு ஆளுநர் எச்சரிக்கை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகின்றது. இங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளார். அவர் எழுதிய பல கடிதங்களுக்கு முதல்வர் பக்வந்த் மான் உரிய பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆளுநர் பொறுமையிழந்த நிலையில் ஆளுநர் அனுப்பிய கடிதத்தில்,””356வது சட்டப்பிரிவின் கீழ், அரசியலமைப்பு இயந்திரத்தின் தோல்வி குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புவது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கு முன், எனது கடிதங்களுக்கு தேவையான தகவல்களை எனக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவறினால் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் படி நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூர், அரியானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்;ஆம்ஆத்மி
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங் கூறுகையில், ‘ பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுகிறது. ஆனால் பா.ஜ அல்லாத ஆளும் மாநிலங்களில் அரசுகளின் செயல்பாட்டில் தலையிடபா.ஜ தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கவர்னர் 356வது பிரிவை பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்தக்கூடாது. அப்படியே அவர்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று விரும்பினால், அது மணிப்பூர் மற்றும் அரியானாவில் செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு