நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்ய முடியாது எனக் கூற முடியும்? என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்ய முடியாது எனக் கூற முடியும்? என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் உச்சநீதிமன்றம் கண்டித்தது. தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்என் ரவி மறுப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அப்போது பொன்முடிக்கு எதிரான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க மறுக்கிறாரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் ஆளுநர் என்ன செய்கிறார் என அவருக்கு தெரிகிறதா? முதலமைச்சர் பரிந்துரையை அவர் நிராகரிக்கிறாரா? இந்த விவகாரத்தில் ஆலோசனையை கூறுங்கள் இல்லையெனில் கடுமையான கருத்துக்களை பதிவு செய்யப்படும் எனவும் உச்சநீதீமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஆஜரான மத்திய தலைமை வழக்கறிஞர் வெங்கடராமன், இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசை பொறுத்தவரையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டு மீண்டும் அமைச்சராக பொறுப்பு வகிக்க ஆளுநர் மறுப்பு தெரிவிப்பதாகவும், நாங்கள் பரிந்துரை செய்த ஒருவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்