“வள்ளுவரும் வள்ளலாரும் சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்” : சு. வெங்கடேசன் எம்.பி

வடலூர்: பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளில் தலையிடும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அவர் செல்லும் இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொண்டு பேசியதாவது: ‘உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்பை ஏற்படுத்தியது. பத்தாயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்,’ பேசியுள்ளார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ““மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார்ஆளுநர் ஆளுநர் அவர்களே வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்