தொடர்ந்து 4வது முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்: புதிய நியமனம் வரை கவர்னராக நீடிப்பாரா?

சென்னை: தமிழ்நாடு கவர்னர் ஆர்என் ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதி நிறைவடைந்ததும், மறுநாள் ஆகஸ்ட் 1ம் தேதி டெல்லி சென்றார். 4 நாட்கள், டெல்லியில் தங்கியிருந்து சென்னை திரும்பினார். ஆனாலும் அவரது பதவி நீட்டிப்பு உத்தரவு டெல்லியில் இருந்து வரவில்லை. இதைதொடர்ந்து, கடந்த மாதம் 19ம் தேதி, 24ம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் கவர்னர் ரவி 4வது முறையாக நேற்று காலை 6.40 மணிக்கு திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்தமுறை ஒரு நாள் பயணமாக டெல்லி செல்லும் கவர்னர் ரவி, நேற்று இரவு 8.20 மணிக்கு அதே விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். கவர்னர் ரவி தொடர்ந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டது, தனது பதவி நீட்டிப்பு உத்தரவை பெறுவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் டெல்லியில் இருந்து, கவர்னரின் பதவி நீட்டிப்பு குறித்து, இதுவரையில் எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதற்கிடையே தமிழ்நாட்டிற்கு புதிய கவர்னரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரையில், ஆர்என் ரவி தமிழ்நாடு கவர்னராக பதவியில் இருப்பார் என்றும்

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்