ஆளுநர் கடித விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு; மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்..!!

சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல் தெரிவித்தார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் கடித விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடந்தது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ஏன்; உத்தரவு நிறுத்தி வைப்பு ஏன்? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆலோசனையில் பங்கேற்றனர். ஆளுநர் விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று தெரிவித்தார். மேலும் ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் என்.ஆர்.இளங்கோ கூறினார்.

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்