தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகள், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடிய தமிழக ஆளுநர்

 

திருச்சி, ஆக.28: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழை விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழை விவசாயிகள், வாழை மதிப்புகூட்டுப்பொருள் உற்பத்தியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்தவர்கள், விற்பனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்ற ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி கூடம் மற்றும் 14 வாழைசார் கண்காட்சிக் கூடங்களை பார்வையிட்டு அதன் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் அந்தந்த தொழில்நுட்பங்களை பற்றி உரையாடினார். முதன்மை வாழை விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், வாழை ஏற்றுமதியாளர்கள், வாழைத்தொழில் முனைவோர்கள், கல்வியாளர்கள் மற்றும் மற்ற வாழை சார்ந்த பங்குதாரர்கள் என 200க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு