அரசுப்பள்ளி கழிவறையில் பாம்பு கடித்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசுப்பள்ளி கழிவறையில் பாம்பு கடித்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலக்காசி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆலம்பட்டறை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவஞானம் என்பவற்றின் மகள் பூவிகா 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம்போல் இன்று காலை பழிக்கு வந்த பூவிகா, தனது தோழிகளுடன் பள்ளி வளாகத்திலுள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது கழிவறையில் மாணவி பூவிகாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆசிரியர்கள் விரைந்து சென்று பார்த்தபொழுது, கழிவறையில் ஒரு பாம்பு தன்னை கடித்துவிட்டதாக மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக மாணவியை மீட்டு குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், மாணவியின் உடலில் குறைந்த அளவிலேயே விஷம் ஏறியுள்ளது. மாணவிக்கு விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது, 6 மணி நேரத்திற்கு மாணவியை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளோம், மாணவிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது