ராமராஜ்யத்தின் உத்வேகத்தால் சிறந்த கல்வி,சுகாதாரம், குடிநீரை அரசு வழங்கி வருகிறது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம்

புதுடெல்லி: ராமராஜ்யத்தின் உத்வேகத்தால் நல்ல கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் இலவச குடிநீர் விநியோகம் ஆகியவற்றை வழங்கி வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஆம் ஆத்மி அரசு சார்பில் சத்ராசால் மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடந்தது. இதில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால்,‘‘ டெல்லி அரசு, ராம ராஜ்யத்தின் உத்வேகத்துடன், நல்ல கல்வி, சுகாதாரம், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம், இரவு முழுவதும் தடையற்ற மின்சாரம் மற்றும் இலவச குடிநீர் விநியோகம் ஆகியவற்றை வழங்குகிறது.

ஜாதி மற்றும் மத அடிப்படையில் ராமர் ஒருபோதும் பாகுபாடு காட்டவில்லை, ஆனால் இன்று சமூகம் அந்த அடிப்படையில் பிளவுபட்டுள்ளது. விலைவாசி அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றால் அதை ராமராஜ்யம் என்று ஒன்றிய அரசால் சொல்ல முடியாது’’ என்றார்.

 

Related posts

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி