விவசாய பாசனத்திற்கு சுமார் 8000 ஏக்கர் பாசன நிலத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாயில் தண்ணீர் சுழற்சி முறையில் முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் மொத்தம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 72.60 மி.க.அடி வீதம் மொத்தம் 609.84 மில்லியன் கனஅடி சுழற்சி முறையில் 8 தவணையாக 10.07.2024 முதல் 06.11.2024 வரை மொத்தம் 120 நாட்களுக்கு முதல் போக விவசாய பாசனத்திற்கு சுமார் 8000 ஏக்கர் பாசன நிலத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் ஓசூர் வட்டம், இடதுபுற கால்வாய், வலதுபுற கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்கள் மூலம் 8000 ஏக்கர் பாசனபரப்புகள் பாசன வசதி பெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப்படுத்திய இலங்கை அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு